சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
x
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது, தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை தாக்குதல்களில் 350-க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.  

இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில், தமிழக காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபரேஷன் ஸ்டோமிங் என்று அழைக்கப்படும் இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனையின் போது, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

Next Story

மேலும் செய்திகள்