ஒட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பதுதான் தங்களது நீண்டகால கோரிக்கை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
x
ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி  திருநெல்வேலி மாவட்ட 
எல்லையான வசவப்பபுரத்தில் துவங்கி தூத்துக்குடி எல்லை பகுதியான தாளமுத்து நகரில் முடிவடைகிறது  2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட இந்தத் தொகுதியில் பெரிய நகராட்சிகள், பேரூராட்சிகள்  எதுவும் கிடையாது. 250க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. 

அதிக பள்ளிகள் உள்ள இத்தொகுதியில் மாணவ - மாணவிகள் கல்லூரி படிப்புக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டி நிலைதான் இப்போதும் உள்ளது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாணவர்கள் கல்லூரி படிப்புக்காக திருநெல்வேலிக்கோ கோவில்பட்டிக்கோ, தூத்துக்குடிக்கோ அல்லது  ஸ்ரீவைகுண்டம் செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பதுதான் தங்களது நீண்டகால கோரிக்கை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்