வரதட்சணை கொடுமை : பெண் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை
வரதட்சணை கொடுமையால் பெண் என்ஜினீயர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வரதட்சணை கொடுமையால் பெண் என்ஜினீயர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பி.டெக் பட்டதாரியான தமிழ்ச்செல்விக்கும், வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அப்போது வரதட்சணையாக 25 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் வேலை செய்து வந்த வெங்கடேஷ், சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக, தமிழ்ச்செல்வியிடம் 10 லட்ச ரூபாய் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2 மாதத்திற்கு முன்பு, தமிழ்ச்செல்வியிடம் பணம் வாங்கி வருமாறு, அவரது தாய் வீட்டுக்கு வெங்கடேஷ் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவாகரத்து நோட்டீசையும் வெங்கடேஷ் அனுப்பி உள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த தமிழ்ச்செல்வி, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தாரமங்கலம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணை மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும், திருமணமாகி 15 மாதங்களே ஆவதால், மேட்டூர் உதவி ஆட்சியர் லலிதாவும் தனது விசாரணையை தொடங்கி உள்ளார். இதற்கிடையே வெங்கடேசும் அவரது தாயார் ராணியும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story