புழல் சிறை தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : பணிச்சுமை காரணமா? - போலீசார் விசாரணை

சென்னை புழல் சிறையில் முதன்மை தலைமை காவலராக பணிபுரிந்த சிவகுமார் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புழல் சிறை தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : பணிச்சுமை காரணமா? - போலீசார் விசாரணை
x
திருநெல்வேலி சிஞ்சன் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் சென்னை புழல் சிறையில் முதன்மை தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி 3 மகள்களை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி சென்றுவிட்டார். இதனால் ஏற்பட்ட தனிமை மற்றும் பனிச்சுமை காரணமாக கடும் மன உளைச்சலால் சிவக்குமார் தவித்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரவாயலில் உள்ள அவரது சகோதரர் விஜய் ஆனந்த்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் மன உளைச்சலில் இருப்பதாகவும், நேரில் பேச வேண்டும் என்று புறப்பட்டு வர அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் சிவகுமாரின் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உள்புறமாக தாழிட்டு இருந்ததை தொடர்ந்து ஜன்னல் வழியாக விஜய் எட்டிப்பார்த்துள்ளார். அப்போது சிவக்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்