பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரிக்க கோரிக்கை மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரிக்க கோரிக்கை மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
x
பொள்ளாச்சி பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கை தமிழகத்தில் இருந்து கேரளா அல்லது கர்நாடக மாநில நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் மற்றும் உச்சநீதிமன்ற நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜ ராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்