சோதனை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

பறக்கும் படையினர் சாலையில் சோதனை செய்வார்கள் என்றும், வீடுகளுக்குள் சோதனை செய்வது வருமான வரித்துறையினர் என்றும், தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.
சோதனை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்
x
பறக்கும் படையினர் சாலையில் சோதனை செய்வார்கள் என்றும், வீடுகளுக்குள் சோதனை செய்வது வருமான வரித்துறையினர் என்றும், தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொள்வதில் சில பொதுவான அறிவுரைகளை அளித்திருப்பதாகவும், அதன்படி, அவர்கள் சாலையில்தான் சோதனை செய்யவேண்டும் என்றும் கூறினார். ஆனால், அவர்களை மீறி வீட்டுக்குள் வாகனங்கள் சென்றுவிட்டால், அந்த வீட்டை சுற்றி காவலுக்கு நின்றுகொண்டு, வருமான வரித்துறையினரை அழைக்க வேண்டும் என்றும், அவர்கள் சட்டப்படியான அனுமதியைப் பெற்று வீட்டுக்குள் சோதனை செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தொகுதிக்கு 2 செலவினப் பார்வையாளர்கள் நியமனம், மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நியமனம் போன்றவை இந்த தேர்தலுக்கென்று சிறப்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்