"வருமான வரித்துறை மூலம் வேலூரில் சோதனை தொடர்கிறது" - சத்யபிரத சாகு

வருமான வரித் துறையினர், வேலூர் தி.மு.க. பிரமுகர் வீட்டில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
வருமான வரித்துறை மூலம் வேலூரில் சோதனை தொடர்கிறது - சத்யபிரத சாகு
x
வருமான வரித் துறையினர், வேலூர் தி.மு.க. பிரமுகர் வீட்டில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, வேலூரில் வருமான வரித்துறை நடத்தும் சோதனை இன்னும் முடியவில்லை என்றார். அந்த சோதனை தொடர்பாக எந்த தகவலும் தங்களுக்கு தரப்படவில்லை என்றும், சோதனை முழு அளவில் முடிந்த பிறகுதான் அறிக்கை தருவார்கள் என்றும், எல்லாவற்றையும் ரகசியமாக வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

செலவினப் பார்வையாளர் கண்காணிப்பு 

வேலூரில், சோதனை தொடர்கிறது என்றால், அது, வருமான வரித்துறையின் சட்டவிதிகளின்படி மேற்கொள்ளப்படுவதாக இருக்கும் என்றும், சத்யபிரதா சாகு தெரிவித்தார். சோதனை எத்தனை நாள் நடத்தப்படும் என்பதெல்லாம் அவர்களது முடிவுக்கு உட்பட்டது என்றும், அதனை சிறப்பு செலவினப் பார்வையாளர் கண்காணித்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். சோதனை நடக்கும் பகுதியில் செலவினப் பார்வையாளர்கள் இருக்கின்றனர் என்றும், அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்கள் என்றும், தாமும் வருமான வரித்துறையும் அறிக்கை அளிக்கவுள்ளதாகவும் கூறினார். இதனை வைத்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்