ராஜபாளையம் : வாகனச் சோதனையில் ரூ. 3.14 கோடி பறிமுதல்

ராஜபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3 கோடியே 14 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் : வாகனச் சோதனையில் ரூ. 3.14 கோடி பறிமுதல்
x
ராஜபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3 கோடியே 14 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அசையாமணி விளக்கு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அந்த வழியாக வந்த தனியார் வங்கிகளின் 2 வாகனங்களை பரிசோதித்தனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 1 கோடியே 52 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், மற்றொரு வாகனத்தில், 1 கோடியே 62 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்களை கொடுத்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி, வட்டாட்சியரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்