தேர்தல் ஆணையம் - விலைப்பட்டியல் வெளியீடு
பதிவு : மார்ச் 21, 2019, 05:18 AM
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நிபந்தனை
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில், மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் தலா 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்றும், சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் 28 லட்ச ரூபாய் வரை செலவிடலாம் என கூறப்பட்டுள்ளது. 

 இது தவிர, வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்த கூடிய பொருட்களுக்கான விலை பட்டியலையும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. 

அதன் படி, மட்டன் பிரியாணி 200 ரூபாய், சிக்கன் பிரியாணி 180 ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என, ஆணையம் நிர்ணயித்துள்ளது. 
இதே போல காலை உணவிற்கு 100 ரூபாய் என்றும் தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் என்றும் தொப்பி பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து பட்டியலை வெளியிட்டுள்ளது. இதே போல், வெஜிடபுள் பிரியாணிக்கு 100 ரூபாய், மதிய உணவுக்கு 100 ரூபாய், குளிர்பானங்களுக்கு 75 ரூபாய், இளநீருக்கு 40 ரூபாய், பொன்னாடைக்கு 150 ரூபாய், தொழிலாளர்களுக்கான செலவு 8 மணி நேரத்திற்கு 450 ரூபாய், பட்டாசுக்கு 600 ரூபாய், மண்டபத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் முதல், ஆறாயிரம் ரூபாய், மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஏசி அறைகளுக்கு ஒன்பதாயிரத்து 300 ரூபாயும், 3 நட்சத்திர ஓட்டல் ஏசி அறைகளுக்கு 5 ஆயிரத்து 800 ரூபாயும் நிர்ணயித்து தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1220 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5330 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4511 views

பிற செய்திகள்

அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

39 views

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக திட்டம் என்பதால் செயல்படுத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு

திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.

32 views

பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்

டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.

32 views

குடிநீர் பஞ்சம் : திசை திருப்ப முயற்சி - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

34 views

தூத்துக்குடி தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெறுவேன் : கனிமொழி

தூத்துக்குடி துறைமுகம், ரயில்வே, தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என அந்த தொகுதி தி.மு.க எம்.பி கனிமொழி உறுதி அளித்துள்ளார்.

24 views

திமுக எம்.எல்.ஏ ராதாமணி இறுதி ஊர்வலம் : சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி

திமுக சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ராதாமணி உடலுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

456 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.