ஏப்.18-ல் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் : வாக்குப்பதிவு பாதிக்குமா? - பதிலளிக்க உத்தரவு
பதிவு : மார்ச் 11, 2019, 01:33 PM
தேர்தலன்று மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதால் வாக்குப்பதிவில் பாதிப்பு இருக்குமா என்பது பற்றி அறிக்கை தருமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கு மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். எனவே, வாக்குப்பதிவு பாதிக்குமா அல்லது இது குறித்து ஏற்கனவே ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதா என்பது பற்றி தெரியப்படுத்துமாறும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.