"வங்கி மோசடி, சைபர் க்ரைம் வழக்குகள் அதிகரித்துள்ளன" - விஸ்வநாதன்
பதிவு : மார்ச் 09, 2019, 08:24 PM
சென்னையில் சைபர் க்ரைம் மற்றும் வங்கி மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை, வேப்பேரி  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ,போக்குவரத்து ,சைபர் க்ரைம், வங்கி மோசடி தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய  சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ,  கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 632  சைபர் க்ரைம் வழக்குகளும்,  4 ஆயிரத்து 640 வங்கி மோசடி வழக்குகளும்,  516 வேலைவாய்ப்பு மோசடி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.  வங்கி மோசடி மற்றும் சைபர் க்ரைம் வழக்குப் பதிவுகள் சமீப ஆண்டுகளாக  அதிகரித்துள்ளதாகவும், மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண்,   நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான மனோபாலா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.