சேலத்தில் உலக மகளிர் தின கொண்டாட்டம்

பாரம்பரிய உடை அணிந்து பெண் காவலர்கள் பங்கேற்ற பேரணி
சேலத்தில் உலக மகளிர் தின கொண்டாட்டம்
x
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர காவல்துறை சார்பில் பெண்களுகளிடையே,ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்க இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை காவல் ஆணையர் சங்கர் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் சியாமளாதேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற பெண் காவலர்களுக்கு,காவல்துறை சார்பில் ஹெல்மெட் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை ஆணையர் தெரிவித்தார்.இதில் 300-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பாரம்பரிய புடவை அணிந்து,இந்த பேரணியில் பங்கேற்றனர்.  பெண் காவலர்கள் ஒருவருக்கு ஒருவர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, செல்பி மற்றும் புகைப்படங்கள்  எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்