திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்...?

தமிழகத்தில் 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டி
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்...?
x
திமுக அணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோல, ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களவையில் ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியையும் தி.மு.க. ஒதுக்கி உள்ளது. இதன்படி, 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. ஒதுக்கியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்