வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே ரூ. 2,000 திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
அதிமுக அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களை திமுக தொடர்ந்து எதிர்த்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை- கொல்லம் இடையேயான தினசரி ரயில் சேவை  துவக்க விழா, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் திமுக அதனை அரசியல் காழ்ப்புணச்சிக்காக எதிர்த்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்