"திமுக, காங். கூட்டணியை தோற்கடிப்போம்" - தமிழிசை சவுந்தரராஜன்

"40 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்
x
டெல்லியில் இருந்து மதுரை விமானநிலையத்திற்கு வந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமித்ஷாவை வரவேற்று, சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த அமித்ஷா அங்கு திரண்டிருந்த தொண்டர்களின் கைகளை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய பா.ஜக. தமிழக தலைவர் தமிழிசை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை அனைத்து தொகுதிகளில் தோற்கடிப்பதே தங்களது நோக்கம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்