ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற. ஓசூர் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
x
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற. ஓசூர் தொகுதி வெற்றிடமாக  அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1998-ல் நடந்த கல்வீச்சு சம்பவ வழக்கில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு  சென்னை சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனை எதிர்த்து, அவர் மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்ட நிலையில், எம்.எல்.ஏ. பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்துள்ளார். இதனால், ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாகவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் பதவி இழந்து விட்டதாகவும் பேரவைச் செயலர் சீனிவாசன், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்