ரூ.2000 பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை - பொதுமக்கள் சாலை மறியல்...

2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரூ.2000 பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை - பொதுமக்கள் சாலை மறியல்...
x
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக  கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பவுண்டரீகபுரம் கிராமத்தில் அரசு அறிவித்துள்ள 2000 ரூபாய் சிறப்பு நிதி பெறக்கூடிய பயனாளிகள் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வசதி படைத்தவர்கள் என்றும், முறையான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்