5வது நாளாக ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 04:13 AM
ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்
மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான 39 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கக்கோரி கடந்த புதன்கிழமை முதல் ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். கிரண்பேடி 5 நாள் பயணமாக டெல்லி   சென்றுள்ள நிலையில் வரும் 21ஆம் தேதி கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தங்களது கோரிக்கைகளை ஆளுநர் நிறைவேற்றும் வரை தர்ணாவில் ஈடுபடுவோம் என முதல்வர் தெரிவித்தார். இந்நிலையில் 5வது நாளாக போராட்டம் தொடர்கிறது.  இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆளுநர் மாளிகை முன்பு  தரையில் படுத்து தூங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் இன்று கருப்புக்கொடி ஏற்றி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.