நள்ளிரவில் தள்ளுவண்டி கடையை உடைத்த போலீசார்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 03:08 AM
சென்னை பெரியமேடு பகுதியில், அப்துல் ரகுமான் என்பவர் தள்ளுவண்டி கடை வைத்துள்ளார்.
சென்னை பெரியமேடு பகுதியில், அப்துல் ரகுமான் என்பவர் தள்ளுவண்டி கடை வைத்துள்ளார். கல்லூரியில் படித்தபடியே, மாலை நேரங்களில் அவர் உணவு பொருள் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில்  கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவில் அப்துல் ரகுமானின் கடை சூறையாடப்பட்டு இருந்தது. அருகில் இருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு நேரத்தில், சீருடையில் வந்த சிலர், கடையை சேதப்படுத்தும் காட்சி பதிவாகி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்துல் ரகுதான், சென்னை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.