சி.பி.எஸ்.இ.பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க அதிரடி - சிசிடிவி, இணையதளம் மூலம் கண்காணிப்பு

பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ.பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க அதிரடி - சிசிடிவி, இணையதளம் மூலம் கண்காணிப்பு
x
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வருகிற மார்ச் மாதம் 2 தேதி மற்றும் 7 ந்தேதி, துவங்குகிறது. இதையொட்டி, தேர்வு குறித்த புள்ளி விவரங்களையும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், 10 ம் வகுப்பு தேர்வை, 18 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்களும், 12 ம் வகுப்பு தேர்வை, 12 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்களும் எழுதுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள், நாடு முழுவதிலும் உள்ள 4 ஆயிரத்து 974 மையங்களில் முறைகேடுகள் நடக்காதபடி தடுக்க, தேர்வு அறைகளில் சிசிடிவி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், நேரலையில் இணையதளம் வழியாக கண்காணிக்கவும், சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதற்கு வசதியாக, தனி செயலியையும் சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்