ரூ.7 லட்சம் மதிப்பில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 02:15 AM
சென்னை ராஜ்பவனில் சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலையை, ஆளுநர் பன்வாரிலால் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
273 கிலோ எடை கொண்ட இந்த சிலையின் மதிப்பு 7 லட்ச ரூபாய் ஆகும். இந்த சிலை திறப்பு விழாவில், சபாநாயகர் தனபால், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ,உடுமலை ராதாகிருஷ்ணன், பாஜக எம்பி இல.கணேசன், பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் என புகழாரம் சூட்டினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.