பாலியல் தொந்தரவு செய்வதாக +2 மாணவிகள் புகார்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 01:52 AM
12-ம் வகுப்பு மாணவிகள் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
12-ம் வகுப்பு மாணவிகள் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் ரமேஷ் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தங்களிடம் தவறாக நடப்பதாக, தலைமை ஆசிரியரிடம் 12-ம் வகுப்பு மாணவிகள் புகாரளித்தனர். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலருக்கு, தலைமையாசிரியர் தகவல் தெரிவித்தார். விசாரணையில் ஆசிரியர் ரமேஷ் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதைத் தொடர்ந்து, ஆசிரியர் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.