மூலிகை செடிகள் கொண்ட பூங்காவாக மாறிய காவல் நிலையம்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 04:09 AM
மாற்றம் : பிப்ரவரி 13, 2019, 04:16 AM
காவல் ஆய்வாளர் ஒருவரின் முயற்சியால் பூங்காவாக மாறிய காவல் நிலையம், அங்கு வரும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
காவல் ஆய்வாளர் ஒருவரின் முயற்சியால் பூங்காவாக மாறிய காவல் நிலையம், அங்கு வரும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களின் மன உளைச்சலையும் குறைக்க உதவி வருவதாக கூறப்படுகிறது.  தரமணி காவல் நிலையத்தில்,  ஆய்வாளர் பாஸ்கர் மேற்கொண்ட முயற்சி தான் இந்த மாற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. காவல் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூங்காவில்,  மூலிகை, காய்கறி, மரவகைகள் மற்றும் அழகு செடிகளும் இடம்பெற்றுள்ளன. புகார் கொடுக்க வருபவர்களும் இந்த பூங்காவை சுற்றிப் பார்த்து செல்கின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.