ஸ்பெயின் பிளம்ஸ் விற்பனை அமோகம்

நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் பர்லியார் பகுதியில் ஸ்பெயின் பிளம்ஸ் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ஸ்பெயின் பிளம்ஸ் விற்பனை அமோகம்
x
நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும்  பர்லியார் பகுதியில் ஸ்பெயின் பிளம்ஸ் விற்பனை சூடுபிடித்துள்ளது. பொதுவாக நீலகிரியில் ரூபி பிளம்ஸ் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. சுமார் 5 கிராம் இருக்கும் இந்த பழங்கள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சீசன் காலமாக உள்ளது. தற்போது பிளம்ஸ் சீசன் இல்லாத நிலையில், ஸ்பெயின் நாட்டு பிளம்ஸ்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.  ஸ்பெயின் நாட்டின் இந்த வகை பிளம்ஸ் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிக இனிப்பு சுவை கொண்ட இந்த பழங்கள் தற்போது 200 ரூபாய் முதல் 250 ரூபாய்  வரை விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்