சின்ன தம்பியை செல்போனில் படம் பிடித்த மக்கள்

கண்ணாடிபுத்தூரில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சின்ன தம்பியை செல்போனில் படம் பிடித்த மக்கள்
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணாடிபுத்தூர் பகுதியில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை போதுமான குடிநீர் மற்றும் ஒய்வு இன்றி சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை அமைதியாக சுற்றி வந்த சின்னத்தம்பி, நேற்று இரவு தென்னந்தோப்பு ஒன்றில் நுழைந்து 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சாய்த்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் இருந்த குடிநீர் குழாயை உடைத்து சின்னத்தம்பி தண்ணீர் குடித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.சின்னத்தம்பியை விடவும் அதனை காண வருபவர்களால் வேளாண் பயிர்கள் அதிகம் சேதம் அடைவதாக விவசாயிகள் கூறியுள்ளனர் சின்னதம்பியின் நடவடிக்கைகளில் வேகம் தெரிவதால் பொதுமக்கள் அருகில் செல்லவேண்டாம்  என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனிடையே, வாழை காட்டு பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானையை அப்பகுதி பொதுமக்கள் சிலர் அருகில் சென்று செல்போனில் படம் பிடித்தனர். இதை கண்ட காவல்துறையினர் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று சின்னத்தம்பியின் செயல்களைக் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்