பழனி - மலை அடிவாரத்தில் சிக்கிய 15 அடி நீள மலைப்பாம்பு

பழனி மலைக்கோவில் அடிவாரத்தில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி - மலை அடிவாரத்தில் சிக்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
x
பழனி மலைக்கோவில் அடிவாரத்தில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனி மலைக்கோவில் அடிவாரம் கிரிவீதியில் உள்ள வன துர்க்கையம்மன் கோவிலில் மலைப்பாம்பு  இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாம்பு பிடிக்கும் நிபுணர் நடராஜன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதனை பிடித்தார். 15 அடி நீளமும், 70 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இந்த பாம்பு கொடைக்கானல் வனப்பகுதியில் விடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்