காய்த்துக் குலுங்கும் அத்திப்பழம் : மருத்துவக் குணம் நிறைந்தது என்பதால் அதிக விற்பனை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சீசன் துவங்கியதை அடுத்து மருத்துவக் குணம் நிறைந்த அத்திப் பழம் காய்த்து குலுங்குகிறது.
காய்த்துக் குலுங்கும் அத்திப்பழம் : மருத்துவக் குணம் நிறைந்தது என்பதால் அதிக விற்பனை
x
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சீசன் துவங்கியதை அடுத்து மருத்துவக் குணம் நிறைந்த அத்திப் பழம் காய்த்து குலுங்குகிறது. குன்னூர் பகுதியில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த அரிய பழங்கள் விளைகின்றன. பேரி, பீச், பிளம்ஸ், மங்குஸ்தான், ஸ்ட்ரா பெர்ரி, பேஷன் புரூட், துரியன் போன்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பழங்கள் அங்கு எளிதில் கிடைக்கும். இந்நிலையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில், அத்திப்பழ மரங்கள் காய்த்து குலுங்குகின்றன. இதனால், அதிகளவில் அவை சந்தைக்கு வந்துள்ளன.  கிலோ 160 ரூபாய் என்றாலும், மருத்துவ குணம் உள்ளது என்பதால் அத்திப்பழத்தை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்