பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.
x
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக பால கிருஷ்ண ரெட்டிக்கு, சிறப்பு நீதிமன்றம் அண்மையில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்திருந்தது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். பாலகிருஷ்ண ரெட்டி, குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை நீதிபதி பார்த்திபன் சுட்டிக் காட்டினார். இதுதவிர, தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பாலகிருஷ்ண ரெட்டியின் இடைக்கால மனுவையும் நீதிபதி பார்த்திபன் தள்ளுபடி செய்து, அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Next Story

மேலும் செய்திகள்