3 நிமிடத்தில் 103 யோகாசனங்கள் செய்து அசத்திய சிறுமி
பதிவு : டிசம்பர் 08, 2018, 06:46 PM
யோகாசனங்கள் மூலம் சாதனை நிகழ்த்திய சிறுமிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மிஷ்தி என்ற 10 வயது சிறுமி உலக சாதனை முயற்சியாக இந்த நிகழ்வை நடத்தினார். 103 யோகாசனங்களை 3 நிமிடங்களில் செய்து அசத்திய சிறுமிக்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்தனர். இதற்கு முன்னதாக 84 யோகாசனங்கள் செய்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் மிஷ்தி 103 யோகாசனங்களை செய்து சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சிறுமியின் இந்த சாதனைக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வாழ்த்துகளை தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.