இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு பாரதி விருது

வானவில் பண்பாட்டு மையம், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதியாரின் 136-வது பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி உள்ளது.
x
வானவில் பண்பாட்டு மையம், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதியாரின் 136-வது பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி உள்ளது. 4 நாட்கள் நடைபெறவுள்ள பாரதி திருவிழா தேசபக்தி பெருவிழா மற்றும் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு பாரதி விருது வழங்கி ஆளுநர் கவுரவித்தார். அமைச்சர்கள், மா பா. பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாரதி ஆங்கிலேயர்களிடன் இருந்து நம்மை காப்பாற்றியது போல தமிழக ஆளுநர், தமிழர்களின் பிரச்சனைகளை டெல்லி கொண்டு சென்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்