மேகதாது விவகாரம் - சட்டப்பேரவையில் நடைபெற்ற காரசார விவாதம்...

சட்டப்பேரவையில் மேகதாது தீர்மானம் தொடர்பாக நடைபெற்ற காரசார விவாதத்தை பார்க்கலாம்...
மேகதாது விவகாரம் - சட்டப்பேரவையில் நடைபெற்ற காரசார விவாதம்...
x
பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்கவே கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்

மேகதாது விவகாரத்தில் ஆளும் அதிமுக அரசு துணிவோடு போராட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார் .. 

துரைமுருகன், எதிர்க்கட்சி துணைத் தலைவர்

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்  வலியுறுத்தினார் 

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஒருமனதாக ஏற்பதாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு  இளைஞர் பேரவை உள்ளிட்ட  கட்சி உறுப்பினர்களும் ஆர்.கே நகர் தொகுதி உறுப்பினர் தினகரனும் தெரிவித்தனர்.. இதையடுத்து அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக, சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.

சட்டப்பேரவை பதிலுரையில் முதல்வர் உருக்கம்

காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை என்று சட்டப்பேரவை பதிலுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேக தாது விவகாரம் தொடர்பாக அரசு கொண்டு வந்த தனி தீர்மானம் மீது, தலைவர்கள் பேசியபின், பதிலுரை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  காவிரி நீர்,  20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது என்றார். மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகம் மிகவும் பாதிக்கப்படும் என்றும், வறட்சி ஏற்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவலை தெரிவித்தார். 

"நானும் ஒரு விவசாயி"

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், காவிரி பிரச்சினை பற்றி தமக்கு தெரியும் என்றும், தானும் ஒரு விவசாயி என்றும் கூறினார். 

"கஜா புயல் தொடர்பாக பேசிய ஸ்டாலின்"

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசும்போது, கஜா புயல் நிவாரணம் தொடர்பாக விவாதிப்பதற்கு சட்டப்பேரவையின் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவைத் தலைவர் தனபால், தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்றார்.  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும், மேகதாதுவை தவிர மற்ற விஷயங்களை பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்