காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு - அதிகாரிகள் நேரில் ஆய்வு

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து குழாயை சரி செய்தனர்.
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற பைப் லைன் பதிக்கும் பணியின்போது, பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், 
தண்ணீர் வீணானது குறித்து தந்தி டி.வி.யில்  செய்தி ஒளிபரப்பானது.  இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து குழாயை சரி செய்தனர். இன்று அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்