ரயில்வே கேட்டை மூட மறுத்த ஊழியர்கள் : நடுவழியில் ரயில் நின்றதால் பரபரப்பு
பதிவு : டிசம்பர் 02, 2018, 09:41 PM
திண்டுக்கல் அருகே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியதாக கூறி, ரயில்வே கேட்டை ஊழியர்கள் மூட மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இன்று மாலை, திருச்செந்தூரிலிருந்து பாலக்காட்டிற்கு பாசஞ்சர் ரயில் சென்றது. இதையடுத்து கொடைரோடு-அம்பாத்துரை இடையே அழகம்பட்டி ரயில்வே கேட்டை, கேட் கீப்பர் மணிமாறன் மூடியுள்ளார். அப்போது அந்த சாலையில் காத்திருந்த திண்டுக்கல் அதிமுக எம்.பி. உதயகுமார், தனது கார் வரும் போது எப்படி கேட்டை மூடலாம்  எனக்கூறி கேட் கீப்பரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.  இதனை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ரயில்வே கேட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், இரவு ஏழரை மணியளவில் மதுரையில் இருந்து பாசஞ்சர் ரயில் வரும் போது கேட்டை மூடாமல் கேட் கீப்பர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அந்த ரயில் சுமார் கால் மணி நேரம் நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு கேட்டை மூடியதால், ரயில் புறப்பட்டது. இது குறித்து மணிமாறன், கொடை ரோடு ரயில்வே போலீசில் புகார் செய்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.