கஜா புயல் : சேலத்தில் ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ மாணவி நேத்ரா சேலம் கடைவீதிகளில் ஸ்கேட்டிங்கில் சென்றபடி நிவாரண நிதி திரட்டினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ மாணவி நேத்ரா சேலம் கடைவீதிகளில் ஸ்கேட்டிங்கில் சென்றபடி நிவாரண நிதி திரட்டினார். அவருடன் சக ஸ்கேட்டிங் வீரர்கள் தனஸ்ரீ, பிரணவ், ரவி, காயத்ரி , சூர்யா ஆகியோரும் சென்றனர். நகை, ஜவுளி மற்றும் இனிப்பு கடைகள் என கடை கடையாக சென்று நிதி திரட்டினர். தாங்கள் திரட்டிய நிதியை ஆட்சியரிடம் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்க உள்ளதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி நேத்ரா தெரிவித்தார்.
Next Story