தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக தொடரும் மத்திய குழு ஆய்வு

கஜா புயல் பாதிப்பு குறித்து 2-வது நாளாக ஆய்வு நடத்தி வரும் மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் சேத பகுதிகளை பார்வையிட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக தொடரும் மத்திய குழு ஆய்வு
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வை முடித்த பின்னர் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வை தொடங்கினார்கள். ஒரத்தநாட்டை அடுத்த புதூர் கிராமத்திற்கு சென்ற மத்திய குழுவினர் அங்கு சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து புலவன்காடு கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், மற்றும் தென்னந்தோப்புகளை அவர்கள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பட்டுகோட்டை அருகே ஆலடிக்குமுளை கிராமத்திற்கு சென்ற மத்திய குழுவினர் சேதங்களை பார்வையிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்