தொடர் மழை எதிரொலி : கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையை அடுத்து கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழை எதிரொலி : கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
x
கஜா புயல் காரணமாக கடந்த வாரம் கொடைக்கானலில் அதிகபட்சமாக 25 செண்டிமீட்டர் மழையளவு பதிவானது. மேலும் அவ்வப்போது மலைப்பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினாலும் நீர் நிலைகளுக்குச் செல்லும் ஓடைகள், அருவிகள், நீர் வீழ்ச்சிகள் என அனைத்திலும் நீர் ஆர்பரித்து ஓடுகின்றது. கொடைக்கானல் நகரப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தேவதை நீர் வீழ்ச்சி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்பரித்து கொட்டுகின்றது. மேலும் ஆங்காங்கே புதியதாக சிறு சிறு அருவிகளும் தோன்றி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. அருவிகளின் முன்னே செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்