பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்...

கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்டதும், அதற்கு மத்திய அரசு கொடுத்ததும்...
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து,  கஜா புயல் நிவாரணத்திற்காக 15,000 கோடி ரூபாய் நிதி வழங்கக் கோரிக்கை விடுத்தார். கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு, மத்திய அரசுக்கு வெள்ள சேத பாதிப்பு நிதியாக 13ஆயிரத்து 731 கோடி நிதி வழங்கக் கோரிக்கை விடுத்தது . ஆனால் இதற்கு ஆயிரத்து 940 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கியது. இதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட  வர்தா புயல் பாதிப்புக்கு,  தமிழக அரசு 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் நிதி கேட்ட நிலையில், மத்திய அரசு 266 கோடியே 17 லட்சம் மட்டுமே வழங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசுக்கு 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் கேட்ட நிலையில், ஆயிரத்து 748 கோடியே 28 லட்சம் மட்டுமே நிதி கிடைத்தது. 


Next Story

மேலும் செய்திகள்