கஜா புயல் : திமுக சார்பில் 64 லட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார் மு.க. ஸ்டாலின்

64 லட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார் மு.க. ஸ்டாலின்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 64 லட்சம் ரூபாய்  மதிப்பிலான நிவாரணப்பொருட்களை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கொடி அசைத்து, அனுப்பி வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர், தங்களின் ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். கஜா புயல் நிவாரணத்திற்கு திமுக மகளிர் அணி, தனியாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, வழங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்