புற்றுநோய் - புரோட்டான் சிகிச்சை கருத்தரங்கம் : லெசோதோ நாட்டு பிரதமர் பங்கேற்பு

புற்றுநோய் - புரோட்டான் சிகிச்சை கருத்தரங்கம் : லெசோதோ நாட்டு பிரதமர் பங்கேற்பு
புற்றுநோய் - புரோட்டான் சிகிச்சை கருத்தரங்கம் : லெசோதோ நாட்டு பிரதமர் பங்கேற்பு
x
புற்றுநோய்க்கான 'புரோட்டான் மருத்துவ சிகிச்சை' குறித்த சர்வதேச 2 நாள் கருத்தரங்கம், சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை லெசோதோ நாட்டு பிரதமர் தாமஸ் தாபேனே குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், சுவிட்ஸர்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட புற்றுநோய் வல்லுனர்கள் பங்கேற்றனர். உகாண்டா,  தென்னாப்பிரிக்கா, ஏமன், இலங்கை நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அப்பலோ மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, துணை தலைவர் பிரீத்தா,  மேலாண்மை இயக்குநர் சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் உரையாற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்