தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

"காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்"- உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு
x
* தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

"காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்"
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழக அரசு அறிவிப்பு

* இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

* எப்போது என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது


தீபாவளி - எப்போது பட்டாசு வெடிக்கலாம்?

அதில், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நிர்ணயித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளியன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்கள் உள்ளிட்டவற்றில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்