100 ரூபாய்க்கு கூட துணி கிடைக்கும் புதுச்சேரி சண்டே பஜார்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புதுச்சேரியில் உள்ள சண்டே பஜாரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
100 ரூபாய்க்கு கூட துணி கிடைக்கும் புதுச்சேரி சண்டே பஜார்
x
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க மக்கள் கடைகளை நோக்கி படையெடுக்கும் நேரமிது.. ஒவ்வொரு இடமாக அலைந்து திரிவது சற்று அலுப்பாக இருக்கும்.. ஆனால் எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்தால் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்... அப்படி எல்லாம் கிடைக்கும் ஒரு இடமாக இருக்கிறது புதுச்சேரி சண்டே பஜார்.. 
100 ரூபாய்க்கு கூட துணி வாங்க முடியும் என்பதே இந்த பஜாரின் சிறப்பு... இதனால் ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இங்கு வந்து தங்களுக்கு விருப்பமான உடைகளை தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்கின்றனர்... 
துணிகள் மட்டுமின்றி காலணிகள், பெண்களுக்கான அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் என எல்லாம் இங்கு கிடைப்பதால் எல்லா நேரமும் சண்டே பஜார் திருவிழாக் கோலமாகவே காட்சி தருகிறது..




Next Story

மேலும் செய்திகள்