புயல் எச்சரிக்கை - கோவாவில் தஞ்சமடைந்த குமரி மீனவர்கள்

புயல் எச்சரிக்கை - கோவாவில் தஞ்சமடைந்த குமரி மீனவர்கள்
புயல் எச்சரிக்கை - கோவாவில் தஞ்சமடைந்த குமரி மீனவர்கள்
x
தமிழக கேரளா கடல் பகுதிகளில் புயல் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து,130 குமரி மாவட்ட மீனவர்கள் கடந்த 5-ஆம் தேதி கோவாவின் கோஸ்டானியா துறைமுகத்தில் தஞ்சமடைந்தனர்.இந்நிலையில் கரை ஒதுங்கிய தங்களுக்கு டீசல் குடிநீர் உணவுப் பொருட்கள் தருவதாக வாஸ்கோமா துறைமுகத்திற்கு வரச்சொல்லி கோவா அரசு அலக்கழித்ததாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.1000-லிட்டர் குடிநீருக்கு ரூபாய் 120 கேட்பதாகவும், பணம் இல்லாததால் குடிக்க கூட நீரின்றி தவிப்பதாக மீனவர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்