தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் வேதனை

தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் -  விவசாயிகள் வேதனை
x
தஞ்சை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தற்போது அறுவடை பணியை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கள்ளபெரம்பூர், சித்திரகுடி, தென்னங்குடி, களிமேடு உள்ளிட்ட பகுதிகளில்  அறுவடைக்கு தயாரான நிலையில் குறுவை நெல், மழையில் நனைந்து அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், சம்பா சாகுபடி நாற்றாங்கால் பயிர்களும் நீரில் மூழ்கியதற்கு, வாய்காலை தூர்வாராததே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்