பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு

மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு
x
மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைக்க நடவிடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதனால் மத்திய அரசுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள்  
1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1 ரூபாய் 50 ரூபாயும் குறைப்பதாக தெரிவித்த அவர் மாநில அரசுகள் வாட்வரியில் இரண்டரை ரூபாய் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறையும் என்றும் அவர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து ஒரு பேரல் 86 டாலராக உள்ளதே எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வும், ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவையும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்