டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும் எட்டாம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் :
இதேபோல நாகையிலும், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால், 200 விசைப்படகுகள் மற்றும் ஐயாயிரம் நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Next Story