மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம்...

தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம்...
x
* சர்க்கரைத்துறை ஆணையராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக இருந்த ரீட்டா ஹரீஸ் தாக்கூர் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு சர்க்கரை கழக நிர்வாக இயக்குநராகவும் அவர் செயல்படுவார் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* நில நிர்வாகத்துறை இணை ஆணையர் விஜயா ராணி அங்கிருந்து மாற்றப்பட்டு, வேளாண்துறை கூடுதல் இயக்குநராக குமாரவேல் பாண்டியனுக்கு பதில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* இதேபோன்று, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்த கே.கற்பகம் அங்கிருந்து மாற்றப்பட்டு, நிலநிர்வாக இணை ஆணையராக விஜயாராணிக்கு பதில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் பிங்கி ஜோவெல், கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* அதிக வரி செலுத்துவோர் பிரிவில் இருந்த வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் எம். பாலாஜி அங்கிருந்து மாற்றப்பட்டு, தலைமை செயலகத்தில் உள்ள டெல்டா மாவட்ட பாசனத்திட்ட  பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* நில நிர்வாகத்துறை இணை ஆணையராக இருந்த ஜே. மேகநாத ரெட்டி அங்கிருந்து மாற்றப்பட்டு, வணிக வரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக நிர்வாக இயக்குநராக இருந்த டி. ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக அதுல் ஆனந்துக்கு பதில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக  அசோக் டோங்ரேவுக்கு பதிலாக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சென்னை பெரு மாநகராட்சி கல்விப் பிரிவு துணை ஆணையராக குமாரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக நிர்வாக இயக்குநராக என். வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* இதேபோன்று, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை செயல் அதிகாரியாக உள்ள எம்.மதிவாணனுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்