சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.13...

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.13...
x
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து சரிவைக் கண்டுவருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலையும் தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 83 ரூபாய் 13 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 51 காசுகள் அதிகம். இதேபோல, டீசலும், நேற்றைய விலையில் இருந்து 56 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 17 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இந்த விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து, 87 ரூபாயை தாண்டும் எனவும், அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்