குட்கா ஊழல் : மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது
பதிவு : செப்டம்பர் 07, 2018, 06:49 AM
மாற்றம் : செப்டம்பர் 07, 2018, 09:14 AM
தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவராவ் அவரது கூட்டாளிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து சிக்கிய மாதவராவ், கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி என்.கே. பாண்டியன் மற்றும் சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் மாலையில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் வருகிற 20 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். பின்னர், மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

352 views

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

1151 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2974 views

பிற செய்திகள்

முதலீட்டாளர்கள் மாநாடு - நீதிபதிகள் கேள்வி

துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என தேசிய துப்புரவு பணியாளர் நல வாரியத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

3 views

பொறியியல் நுழைவுத்தேர்வு: '25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம்' - உச்சநீதிமன்றம்

பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் 25 வயதிற்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

101 views

ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் - உலகளவில் வாட்ஸ்-அப் நிறுவனம் கட்டுப்பாடு

ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' செய்ய முடிகின்ற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

13 views

குழந்தையை காரில் கடத்தி வந்த தாசில்தார் கைது

கர்நாடகாவில் தம்பதியிடம் இருந்து குழந்தையை கடத்தி வந்த தமிழகத்தை சேர்ந்த தனிதாசில்தார் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

135 views

ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு - பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்

கரூரில் அரசு பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

12 views

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.