கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல்கள் - ஓ.எஸ்.அருண் கச்சேரி ரத்து
பதிவு : ஆகஸ்ட் 09, 2018, 05:01 PM
மாற்றம் : ஆகஸ்ட் 09, 2018, 05:10 PM
இந்த நிகழ்ச்சியை இந்து அமைப்புகளும், கர்நாடக இசை ரசிகர்களின் ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்திருந்தனர்
பிரபல பாடகர் ஓ.எஸ்.அருணின் ‘இயேசுவின் சங்கம சங்கீதம்’ என்ற இசை நிகழ்ச்சி, வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.  இந்த நிகழ்ச்சியில், இயேசுநாதரை புகழ்ந்து பாடும் கீர்த்தனைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை சில இந்து அமைப்புகளும், கர்நாடக இசை ரசிகர்களின் ஒரு பிரிவினரும் சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்த்தனர். மத ரீதியான விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, தியாகராஜரின் ராமர் கீர்த்தனைகளில் வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு, கிறிஸ்தவ பாடலாக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு முன் தேவாலயத்தில் கச்சேரி நடத்திய டி.எம்.கிருஷ்ணா, கிறிஸ்தவ பாடல் பாடிய நித்யஸ்ரீ மகாதேவன், கிறிஸ்தவ பாடல் தொகுப்பை வெளியிட்ட அருணா சாய்ராம் ஆகியோருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. மதமாற்றம் செய்யும் அமைப்புகளுக்கு இவர்கள் துணை போவதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டனர்.

இடைவிடாமல் தொடர்ந்த இத்தகைய சர்ச்சைக்கு இடையில், “சொந்த காரணங்களுக்காக“ ஆகஸ்ட் 25 நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஓ.எஸ்.அருண் அறிவித்துள்ளார்.
அருணா சாய்ராம் விளக்கம்

விமர்சனங்களுக்கு பதிலளித்த அருணா சாய்ராம், பாரம்பரிய கர்நாடக இசையில், தான் மாற்றம் செய்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக பாடல்களை கிறிஸ்தவத்திற்காக மாற்றியதாக வரும் தகவல் வதந்தி என்றும் கூறியுள்ளார்.
டி.எம்.கிருஷ்ணா சவால்

இசை நிகழ்ச்சிக்கு எழுந்த எதிர்ப்பை கண்டித்த பாடகர் டி.எம். கிருஷ்ணா, இனி ஒவ்வொரு மாதமும் இயேசு அல்லது அல்லாஹ்-வை புகழும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்

இலங்கை இந்தியா கடல் எல்லை குறித்து இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டும் - இலங்கை அமைச்சர் சையது அலி ஜாஹிர் ஹுசைன்

இலங்கை அமைச்சர் சையது அலி ஜாஹிர் உசேன் இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து பேசினார்

22 views

கேரள மாநில பகுதிக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 141 புள்ளி 20 அடியை எட்டியதை தொடர்ந்து கேரள மாநில பகுதிக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

741 views

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

சென்னை வளசரவாக்கத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண்குழந்தையை மழைநீர் கால்வாயில் இருந்து பொதுமக்கள் மீட்டுள்ளனர்.

1971 views

தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு பின் இருக்கை ஒதுக்கியது தவறு - அமைச்சர் சி. வி.சண்முகம்

தலைமை நீதிபதி பதவியேற்பில் நீதிபதிகளுக்கு அவமதிப்பு கண்டனத்துக்குரியது - சட்டத்துறை அமைச்சர் சி. வி.சண்முகம்

523 views

சிறுத்தையுடன் தனியாளாய் போராடிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

கோவை வால்பாறையை சேர்ந்த முத்து மாரிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது

1046 views

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகள் துவக்கம்

சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.