5 பேரை பலி வாங்கிய ரயில்வே தடுப்பு சுவர் அகற்றம்

சென்னை பரங்கிமலையில் மின்சார ரயில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, 15 அடி தூர தடுப்பு சுவற்றை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
5 பேரை பலி வாங்கிய ரயில்வே தடுப்பு சுவர் அகற்றம்
x
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ஆம் தேதி மின்சார ரயில் தடுப்புச்சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, தடுப்புச் சுவர்களை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் எழும்பூரில் இருந்து தாம்பரம் செல்லும் வழியில் சுமார் 15 அடி தூரமுள்ள தடுப்புச் சுவற்றை அதிகாரிகள் இடித்து  தள்ளினர். மேலும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்புச்சுவற்றை இடிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்